உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குளிர்கால கூட்டத்தொடர் பாதுகாப்பு போலீசாருக்கு கூடாரம் அமைப்பு

குளிர்கால கூட்டத்தொடர் பாதுகாப்பு போலீசாருக்கு கூடாரம் அமைப்பு

பெலகாவி: பெலகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் டிச., 2ல் இருந்து துவங்குவதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள, 7,000 போலீசார் தங்குவதற்காக, கூடாரம் அமைக்கப்பட்டு உள்ளது. பெலகாவி குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் டிச., 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த பத்து நாட்களுக்கும் சுவர்ண விதான் சவுதாவை சுற்றிலும், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்புக்கு, 7,000 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, சுவர்ண விதான் சவுதா அருகில், பிரமாண்டமான ‘ஷெட்’ அமைக்கப்பட்டு உள்ளது. 2,500 போலீசார் இங்கு தங்கலாம். மேலும், ஒவ்வொரு போலீசாருக்கும் தனித்தனி கட்டில்கள், படுக்கைகள், விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தங்கும் இடத்தில் வெந்நீர் வசதியும், தரமான உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள் முழுதும் பணியில் இருக்கும் போலீசாரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், அந்த குடியிருப்பு பகுதியில், ஒரு பொழுதுபோக்கு மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவசர தேவைகளுக்காக ஒரு மருத்துவ குழுவும், தீயணைப்பு குழுவும் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 30_DMR_0002, 30_DMR_0003 கூட்டத்தொடர் பாதுகாப்புக்கு வரும் போலீசார் தங்குவதற்கான கட்டில்கள். அடுத்த படம், கூடாரங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ