உள்ளூர் செய்திகள்

 சபாநாயகர் கோபம்

பெங்களூரு: அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, சட்டசபையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதை கண்டுகொள்ளாமல் கேள்வி, பதில் அமர்வு நடத்த சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல் உத்தரவிட்டார். கூச்சல், குழப்பத்திற்கு மத்தியிலும் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட உறுப்பினர்களை பார்த்து, 'வறட்சி பற்றி விவாதிக்க உங்களுக்கு ஆர்வம் இல்லை. போராட்டம் நடத்தி அவையின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்' என்று கோபத்துடன் கூறினார். குறுக்கிட்டு பேசிய அசோக், ''இந்த அரசுக்கு மானம், மரியாதை இருந்தால் மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது என்று அறிவிக்கட்டும். உங்களின் ரோன் தொகுதியில் வறட்சி இல்லையா,'' என கேள்வி எழுப்பினார். போராட்டத்தின் போது ராகுலுக்கு எதிராக பா.ஜ., உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்