உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கூடுதல் எஸ்.பி., கார் மீது மோதிய மூன்று வாலிபர்கள் கைது

கூடுதல் எஸ்.பி., கார் மீது மோதிய மூன்று வாலிபர்கள் கைது

தட்சிண கன்னடா: கூடுதல் எஸ்.பி.,யின் வாகனம் மீது காரால் மோதி, போலீசாரை பணி செய்ய விடாமல் செய்ததாக மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தட்சிண கன்னடாவின் உஜ்ரேயை சேர்ந்த மகேஷ் திம்மரோடி, ராஷ்ட்ரிய ஹிந்து ஜாக்ரன வேதிகே என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். சவுஜன்யா கொலையில், பா.ஜ., தேசிய அமைப்புச் செயலர் சந்தோஷ் மீது அவதுாறு கருத்து வெளியிட்டிருந்தார். புகாரை அடுத்து, அவரை கைது செய்ய போலீசார் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது, மகேஷை கைது செய்ய விடாமல், போலீசாருக்கு அவரது ஆதரவாளர்கள் இடையூறு செய்தனர். எனினும் மகேஷ் கைது செய்யப்பட்டார். மகேஷை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றபோது, உடுப்பி மாவட்ட கூடுதல் எஸ்.பி., பரமேஸ்வர் ஆன்ந்த் சென்ற வாகனத்தின் மீது ஒரு கார் மோதியது. போலீசாரின் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக, உஜ்ரேயை சேர்ந்த சுருஜன், ஹித்தேஷ் ஷெட்டி, சஹான் ஆகிய மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டதாக கார்காலா ரூரல் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் டி ஆகியோர் மீதும் பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதுாறு வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில் மகேஷை பெல்தங்கடி போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்பிய 'யு டியூபர்' சமீர், இன்று பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் விசாரணக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சரியல்ல! அரசியல் ரீதியான ஒருவர் மீது குற்றம் சுமத்தலாம். ஆனால், தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லாமல் ஒருவர் மீது தனிப்பட்ட ரீதியில் அவதுாறு பரப்பக் கூடாது. இதனாலே, மகேஷ் கைது செய்யப்பட்டார். அரசியல் ரீதியாக எதிரியாக இருந்தாலும், அவர்கள் மீது வீண் பழி சுமத்துவது சரியல்ல. மாநிலத்தில் அனைவரது தனிப்பட உரிமைகளும் பாதுகாக்கப்படும். சிவகுமார், துணை முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை