உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பதிவு செய்யாத வெளிமாநில வாகனங்களுக்கு கிடுக்கி

பதிவு செய்யாத வெளிமாநில வாகனங்களுக்கு கிடுக்கி

பெங்களூரு: ''கர்நாடகாவில் பதிவு செய்யப்படாத வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.மேல்சபையில் ம.ஜ.த., உறுப்பினர் கோவிந்த ராஜு கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மோட்டார் வாகன விதிகள் 5, 1989ன் விதி 46 (2)ன்படி, மறு பதிவுக்காக, வாகனத்தை சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரியிடம் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்.ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், மற்றொரு மாநிலத்தில் 12 மாதங்களுக்கு மேல் இயக்கும் வாகன உரிமையாளர்கள், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் விதி 54ன்படி, அசல் பதிவு அதிகாரியிடம் இருந்து என்.ஓ.சி., எனும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.இந்த சான்றிதழ் பெற்று, 30 நாட்களுக்குள், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் விதி 81ன்படி, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தையும், கர்நாடக மோட்டார் வாகன வரிச்சட்டம், 1957 ன் வரி அட்டவணையின்படி, 'கே.எம்.வி., - 27 மற்றும் சி.எம்.வி., - 27ல்' படிவத்தில், மறுபதிவு எண்ணுக்கு, அதிகாரியிடம் விண்ணப்பித்தை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.P.Anand
மார் 20, 2025 17:38

வாகன பதிவுகளை மத்திய அரசிடம் விடவேண்டும். முன்னை போல இப்போது இல்லை. வேலை விஷயமாக பல மாநில எல்லைகளை கடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பல்லவியை பாடுவார்கள்.


Ramesh Sargam
மார் 20, 2025 12:38

போக்குவரத்து துறையினர், போக்குவரத்து போலீசார் வாங்கும் லஞ்சம் குறைந்துவிட்டதுபோல தெரிகிறது. அதை உயர்த்த இப்படி ஒரு கிடுக்கி திட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை