உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோடை விடுமுறையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூரு: கோடை விடுமுறையை முன்னிட்டு, பெலகாவி - பெங்களூரு, பெங்களூரு - எர்ணாகுளம் இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தென்மேற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கை:

பெலகாவி - பெங்களூரு

எண்: 07373: இந்த ரயில், இன்று அதிகாலை 4:00 மணிக்கு, பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 3:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., எனும் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா முனையம் ரயில் நிலையத்தை வந்தடையும்.எண்: 07374: வரும் 15ம் தேதி மதியம் 12:00 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 11:30 மணிக்கு பெலகாவியை சென்றடையும்.இந்த ரயில் லோண்டா, அல்நாவர், தார்வாட், எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி, எஸ்.எம்.எம்., ஹாவேரி, தாவணகெரே, அரசிகெரே, துமகூரு, சிக்கபானவரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூரு -- எர்ணாகுளம்

எண்: 06575: இன்று மாலை 4:35 மணிக்கு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலை 3:00 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும்.எண்: 06576: வரும் 14ம் தேதி இரவு 10:00 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10:55 மணிக்கு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தை வந்தடையும்.இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுக்கு, அதிகாரபூர்வ ரயில்வே வலைதளத்திற்கு சென்று பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள ரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !