உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வளர்ச்சி பணிகளை கூறாத அதிகாரிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி எரிச்சல்

 வளர்ச்சி பணிகளை கூறாத அதிகாரிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி எரிச்சல்

மாண்டியா: மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து, சரியாக தகவல் தெரிவிக்காத அதிகாரிகளை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கண்டித்தார். மாண்டியா மாவட்ட பஞ்சாயத்து அரங்கத்தில், மத்திய அமைச்சர் குமாரசாமி தலைமையில், மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்பு கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது. அப்போது, மத்திய அரசு திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து, தகவல் கேட்டார். தகவல் தெரிவிக்காமல் சில அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், அவர்களை குமாரசாமி கண்டித்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், மேம்பாட்டு திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பற்றி தகவல் அளிக்காத அதிகாரிகளின் அலட்சியம் சரியல்ல. எம்.எல்.ஏ.,க்களுக்கு கொம்பு உள்ளதா; அவர்களின் பேச்சை கேட்டு, வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு செய்கிறீர்களா... அதிகாரிகளான நீங்கள், மக்களுக்காக பணியாற்றுகிறீர்களா அல்லது எம்.எல்.ஏ.,க்களுக்காக பணியாற்றுகிறீர்களா... பிரச்னைகள் இருந்தால் என் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். இது கூட உங்களுக்கு தெரியாதா...எனக்கு ஒருமையில் பேச தெரியாதா... இது என்ன, துக்ளக் ராஜ்யமா... கடந்த 20 ஆண்டுகளில், பல எம்.எல்.ஏ.,க்களை நான் பார்த்திருக்கிறேன். மாண்டியா மாவட்டத்தில், மழை பற்றாக்குறையால், 18 சதவீதம் பயிரிடும் பணி மட்டுமே முடிந்துள்ளது. இத்தகைய வறட்சி காலத்தில், வங்கிகள் விவசாயிகளிடம் பலவந்தமாக கடனை வசூலிக்க கூடாது. வங்கிகளின் நெருக்கடியால், விவசாயிகள் தற்கொலை செய்யும் சூழ்நிலையை உருவாக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்