உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கூண்டில் புலி சிக்கியதால் கிராமத்தினர் நிம்மதி

 கூண்டில் புலி சிக்கியதால் கிராமத்தினர் நிம்மதி

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், மத்துரு கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரா, 28. இவர் கடந்த வாரம், தன் வயலில் பணியில் ஈடுபட்டிருந்தார். சிறிது துாரத்தில் புலி தென்பட்டது. புலி நடமாடுவது குறித்து, கிராமத்தினரை எச்சரித்தார். இது குறித்து, வனத்துறையினருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் கிராமத்துக்கு வந்து, புலியை தேட துவங்கினர். 'ட்ரோன்' கேமராக்களை பயன்படுத்தி தேடிய போது, மத்துார் காலனியின், மல்லிகை தோட்டம் ஒன்றில் புலி இருப்பதை கண்டுபிடித்தனர். இதற்கிடையே, நேற்று முன் தினம் இரவு, வனத்துறையினர் வைத்த கூண்டில் அந்த புலி சிக்கியது. இதனால் கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்