உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கல்லுாரி வேன் டிரைவர் வெட்டிக்கொலை கள்ளக்காதல் காரணமா?

 கல்லுாரி வேன் டிரைவர் வெட்டிக்கொலை கள்ளக்காதல் காரணமா?

தொட்டபல்லாபூர்: பெங்களூரு அருகே வேன் டிரைவர் வெட்டிக் கொல்லப்பட்டார்; கள்ளக்காதல் விவகாரமா என, போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் வசித்தவர் பவன் குமார், 30. கோலார் ஜாலப்பா கல்லுாரியில், வேன் டிரைவராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தார். அவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. போனில் பேசியபடி வெளியே சென்றவர், நண்பரின் ஆட்டோவில் எலஹங்காவிலிருந்து ஹிந்துபூர் சென்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த கும்பல், ஆட்டோவை வழி மறித்தது. பின், ஆட்டோவில் இருந்த பவன் குமாரை பிடித்து வெளியே இழுத்த கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது. பவன்குமாரை கொலை செய்தது யார், எதற்கான கொன்றனர் என்ற விபரம், உடனடியாக தெரியவில்லை. திருமணமான பவன் குமார், திருமணத்திற்கு முன் இளம்பெண் ஒருவரை காதலித்தார். அவர்களிடையே ஏற்பட்ட சண்டையால் இருவரும் பிரிந்தனர். அந்த பெண் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக முன்னாள் காதலியுடன் பவன் குமார் அடிக்கடி மொபைல் போனில் பேசியதாகவும், இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், பவன் குமாரின் உறவினர்கள் போலீசாரிடம் கூறினர். இதனால், கள்ளக்காதல் விவகாரத்தில் பவன்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை