உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருப்பதி சென்ற பரமேஸ்வருக்கு வரவேற்பு

திருப்பதி சென்ற பரமேஸ்வருக்கு வரவேற்பு

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தன் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதி சென்றிருந்தார். அவருக்கு ஆந்திர காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு, இன்று 74வது பிறந்தநாள். இதை முன்னிட்டு, ஏழுமலையானை தரிசிப்பதற்காக, நேற்று திருப்பதி சென்றார். திருப்பதியின், காதங்கி கிராமத்தின் நெடுஞ்சாலை டோல் அருகில், உள்ளூர் எம்.எல்.ஏ., கங்காலபனி சீனிவாசலு உட்பட, காங்கிரஸ் தலைவர்கள், பரமேஸ்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது அங்கு குவிந்திருந்த தொண்டர்கள், 'அடுத்த முதல்வர் பரமேஸ்வர், அடுத்த முதல்வர் பரமேஸ்வர்' என, உரத்த குரலில் கோஷமிட்டனர். இதை கேட்டு அவர் சிரித்தபடி இருந்தார். நெடுஞ்சாலையில் அமைச்சரை வரவேற்றதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தன. அமைச்சரை சூழ்ந்து கொண்ட தொண்டர்களை கலைக்க முடியாமல் போலீசார் திணறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை