உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெட்டி கடைகளில் மது விற்பனை எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் புகார்

பெட்டி கடைகளில் மது விற்பனை எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் புகார்

தங்கவயல்: 'தங்கவயல் தாலுகா, என்.ஜி.ஹுல்கூர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடப்பதை தடுக்க வேண்டும்' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் கிராம மக்கள் நேற்று புகார் செய்தனர்.என்.ஜி.ஹுல்கூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் சட்ட விரோதமாக பெட்டி கடைகளிலும், சிலரின் வீடுகளிலும் மது விற்பனை செய்யப்படுகிறது.இதனால் பலரின் வீடுகளில் குடும்ப தகராறு, சண்டை சச்சரவுகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. தெருக்களில் போதையில் மோதல்களும் நடப்பதால் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், என்.ஜி.ஹுல்கூருக்கு சென்ற தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம், 'சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்' என கிராம மக்கள் வலியுறுத்தினர்.அப்போது போதையில் இருந்த ஒருவர் அங்கு தகராறு செய்தார். போலீசாரையும் பிடித்து தள்ளினார். இதைத் தொடர்ந்து அப்பகுதியினர், போதையில் இருந்தவரை வெளியேற்றினர்.அங்கிருந்த பெண்களிடம் ரூபகலா கூறுகையில், ''சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை