உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிலம்ப விளையாட்டில் பெண்கள் திருவள்ளுவர் சங்க தலைவர் அழைப்பு

 சிலம்ப விளையாட்டில் பெண்கள் திருவள்ளுவர் சங்க தலைவர் அழைப்பு

பெங்களூரு: ''சிலம்ப விளையாட்டை ஊக்குவிக்க, கர்நாடக அரசிடம் வலியுறுத்துவோம். பெண்கள் அதிக அளவில் கற்க வேண்டும்,'' என்று, தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் கூறினார். பெங்களூரு சஞ்சய்நகரில் உள்ள, கர்நாடக உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேஷன் சார்பில், தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2025 போட்டி நேற்று நடந்தது. தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவருமான எஸ்.டி.குமார், கர்நாடக உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேஷன் தலைவர் சுதாகரன், தமிழக உலக சிலம்ப விளையாட்டு அசோசியேஷன் தொழில்நுட்ப இயக்குநர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி எஸ்.டி.குமார் பேசுகையில், ''சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு. நமது வரலாறுடன் இணைந்து உள்ளது. ஐ.நா., தலைமையத்தில் சிலம்பம் அங்கீகாரம் பெற்று உள்ளது. ''கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது போன்று, சிலம்பம் விளையாட்டு ஊக்குவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்துவோம். சிலம்பம் மிகச்சிறந்த தற்காப்பு கலை. பெண்கள் அதிகளவில் கற்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி