உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யஷ்வந்த்பூர் - மங்களூரு சந்திப்பு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

 யஷ்வந்த்பூர் - மங்களூரு சந்திப்பு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

பெங்களூரு: யஷ்வந்த்பூர் - மங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்றும் வெற்றிகரமாக நடந்தது. யஷ்வந்த்பூரில் இருந்து, கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, தென்மேற்கு ரயில்வே, நேற்று யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு காலியான, 16 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தியது. இந்த ரயிலில், பெங்களூரு - மைசூரு கோட்டங்களை சேர்ந்த ரயில்வே உயர் அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்களும் சென்றனர். யஷ்வந்த்பூரில், ஐசி2015 எண் கொண்ட ரயில், காலை 6:50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:40 மணிக்கு மங்களூரு சந்திப்பை சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் மங்களூரு சந்திப்பில் இருந்து, 3:10 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடைந்தது. அதே வேளையில், சக்லேஸ்பூர் - சுப்ரமண்யா சாலை ரயில் நிலையம் இடையே உள்ள மலைபாதையில் வந்தே பாரத் ரயில், எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன் ரயிலின் வேகம், பாதுகாப்பு, செயல்பாட்டு அம்சங்களையும் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ