உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தலையில் கல் போட்டு வாலிபர் கொலை

தலையில் கல் போட்டு வாலிபர் கொலை

சிக்கபல்லாபூர்: வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொன்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.சிக்கபல்லாபூர் டவுன் சாம்ராஜ்பேட் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 29. வெல்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.அவரது மொபைல் நம்பருக்கு மனைவி அழைத்தபோது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.நேற்று காலை சிக்கபல்லாபூரில் இருந்து கவுரிபிதனுார் செல்லும் சாலையில் ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல் கிடந்தது.தகவல் அறிந்த சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷால் சவுக்சே, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.ஸ்ரீகாந்த் தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது. என்ன காரணம், கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. ஸ்ரீகாந்த்துக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ