மேலும் செய்திகள்
வங்கி கடன் 11% வளர்ச்சி ரிசர்வ் வங்கி தகவல்
20-Oct-2025 | 2
இந்திய வங்கிகளை குறிவைக்கும் சர்வதேச நிறுவனங்கள்
20-Oct-2025 | 1
வங்கி கடன் 11% வளர்ச்சி ரிசர்வ் வங்கி தகவல்
20-Oct-2025
புதுடில்லி:அனைத்து பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் நுண்கடன்கள், கடந்த டிசம்பர் காலாண்டில் 30.09 சதவீதம் அதிகரித்து, 4.02 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. மேலும், இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இது 6 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நுண்நிதி நிறுவனங்கள், நுண்கடன் பிரிவில் 38.30 சதவீத பங்குடன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வங்கிகள் 33.40 சதவீத பங்குடனும்; ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் 17.40 சதவீதத்துடனும்; வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 9.40 சதவீதத்துடனும் இதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. ஒரு கடனாளி, பலமுறை கடன் வாங்குவது தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில், மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், டிசம்பர் காலாண்டில் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. எனினும், மொத்த கடன் அடிப்படையில், பீஹார் மாநிலமே அதிக பங்கு வகிக்கிறது.
20-Oct-2025 | 2
20-Oct-2025 | 1
20-Oct-2025