மேலும் செய்திகள்
எண்கள்
24-Dec-2025
வர்த்தக துளிகள்
17-Dec-2025
அக்ரி டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி
14-Dec-2025 | 1
அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது
12-Dec-2025
புதுடில்லி: அண்மைக் காலமாக 'பேடி எம்' நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நடப்பாண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கி, 'பேடிஎம் பேங்க்' செயல்பாடுகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளுக்கு பின், இந்நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இதன் தாய் நிறுவனமான 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' முதல் முறையாக, கடந்த மார்ச் காலாண்டில், அதன் வருவாயில் 2.60 சதவீத சரிவை கண்டுள்ளது. நிகர நஷ்டம் 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் 2,270 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் 40 லட்சம் மாதாந்திர பயனாளர்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நிலைமையை சமாளித்து ஏற்றத்தை அடைய, வரும் நாட்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க இருப்பதாகவும்; நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யஉள்ளதாகவும் பேடிஎம் தெரிவித்துள்ளது.
24-Dec-2025
17-Dec-2025
14-Dec-2025 | 1
12-Dec-2025