உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / 174 நாடுகளின் ஜி.டி.பி.,யை விட எஸ்.பி.ஐ., இருப்பு அதிகம்

174 நாடுகளின் ஜி.டி.பி.,யை விட எஸ்.பி.ஐ., இருப்பு அதிகம்

புதுடில்லி:எஸ்.பி.ஐ., வங்கியின் இருப்புநிலை, உலகின் 174 நாடுகளின் தனிப்பட்ட ஜி.டி.பி., மதிப்பை விட அதிகம் என, நிதி சேவைகள் நிறுவனமான 'மோதிலால் ஆஸ்வால்' தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:எஸ்.பி.ஐ., வங்கியின் இருப்புநிலை 62 லட்சம் கோடி ரூபாய். இது, 174 நாடுகளின் தனிப்பட்ட ஜி.டி.பி., மதிப்பை விட அதிகமாகும்.வங்கி நிலையான வளர்ச்சியை வழங்கி வருவதால், இனி வரும் காலங்களில் இந்த மதிப்பு மேலும் அதிகரிக்கும். வலுவான கடன் வளர்ச்சி, குறைந்த செயல்பாட்டு செலவினங்கள் ஆகியவற்றின் காரணமாக எஸ்.பி.ஐ., அதிக லாபத்துடன் நீடித்த வளர்ச்சியை பதிவு செய்யக் கூடும். கடனுக்கும், டிபாசிட்டுக்கும் இடையேயான விகிதமும் குறைவாக உள்ளது, வங்கிக்கு சாதகமான அம்சமாகும். இதன் காரணமாக வங்கியின் சந்தை மதிப்பும், சமீபத்தில் 8 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ