உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / நடப்பாண்டில் வளர்ச்சி 6.20% ஐ.நா., வெளியிட்ட கணிப்பு

நடப்பாண்டில் வளர்ச்சி 6.20% ஐ.நா., வெளியிட்ட கணிப்பு

புதுடில்லி:வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்வதாகவும், நடப்பாண்டில் 6.20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யக் கூடும் என்றும், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, 'உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் 2024' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் தெரிவிக்கபட்டு உள்ளதாவது:நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.20 சதவீதமாக இருக்கக்கூடும். அதிகரித்து காணப்படும் உள்நாட்டு தேவை மற்றும் தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறைகளின் வலுவான வளர்ச்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பன்னாட்டு முதலீடுகள் காரணமாக, இந்தியா வலுவான முதலீட்டு செயல்திறனை பதிவு செய்தது. கடந்தாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து பெரிய பொருளாதாரங்களிலும் தயாரிப்புத் துறை உற்பத்தி குறியீடு குறைந்தே காணப்பட்டது. வினியோக தொடரில், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவை முக்கிய மாற்று தயாரிப்பு தளமாக பார்க்கின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.ஓ., கணிப்பு

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.30 சதவீதமாக இருக்கும் என்று என்.எஸ்.ஓ., என்னும் தேசிய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 171.79 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த நிதியாண்டில் 160.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில் 7.20 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7.30 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதுஇவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை