மேலும் செய்திகள்
அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது
12-Dec-2025
கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்
10-Dec-2025
நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,
04-Dec-2025
புதுடில்லி:சில்லரை விலை பணவீக்க விகிதம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.09 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான இந்த பணவீக்க விகிதம் கடந்த ஜனவரியில் 5.10 சதவீதமாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரியில், 6.44 சதவீதமாகவும் இருந்தது.கடந்த ஜனவரி மாதத்தில் 8.30 சதவீதமாக பதிவாகியிருந்த உணவுப் பிரிவு பணவீக்கம் பிப்ரவரில், 8.66 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதத்தில், பணவீக்கம், தானியங்களில் 0.50 சதவீதமும்; இறைச்சி மற்றும் மீன்களில் 2.30 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டது.கணிப்பு
எனினும், மசாலாப் பொருட்கள், முட்டை மற்றும் சமையல் எண்ணெய்களில் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே, ஒட்டுமொத்த பணவீக்கம் குறைய காரணமாக அமைந்தது.நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.40 சதவீதமாக இருக்கும் என்றும் நடப்பு காலாண்டில், 5 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கத்தை, 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை வைத்திருக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.இந்த வகையில், பிப்ரவரி மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து ஆறு மாதங்களாக, சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் பராமரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம், சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை உற்பத்தி
நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜனவரியில், 3.80 சதவீதமாக இருந்தது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.மேலும் கடந்தாண்டு டிசம்பருக்கான தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியையும் முன்பிருந்த 3.80 சதவீதத்திலிருந்து, 4.20 சதவீதமாக மேம்படுத்தி அறிவித்துள்ளது.இதுகுறித்து, அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் 3.80 சதவீதமாக இருந்தது. இது கடந்தாண்டு டிசம்பரில், 4.20 சதவீதமாக இருந்தது. சரிவு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 5.90 சதவீதமாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 5.50 சதவீதமாக இருந்தது.ஜனவரியில் மின்சாரத்துறை மற்றும் சுரங்கத்துறை உற்பத்தி அதிகரித்திருந்த போதிலும், தயாரிப்புத்துறை உற்பத்தி பெரும் சரிவைக் கண்டதால், ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி சரிந்துள்ளது.கடந்தாண்டு டிசம்பரில், 4.50 சதவீதமாக இருந்த தயாரிப்பு துறை உற்பத்தி, ஜனவரியில் 3.20 சதவீதமாக குறைந்தது. மின்சாரத்துறை உற்பத்தி, 1.20 சதவீதத்தில் இருந்து 5.60 சதவீதமாகவும், சுரங்கத்துறை உற்பத்தி, 5.20 சதவீதத்தில் இருந்து, 5.90 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.தொடர்ந்து ஆறு மாதங்களாக, சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் 6 சதவீத இலக்குக்குள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
12-Dec-2025
10-Dec-2025
04-Dec-2025