உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பிப்., 29க்கு பிறகும் பேடிஎம் எப்போதும் போல செயல்படும்

பிப்., 29க்கு பிறகும் பேடிஎம் எப்போதும் போல செயல்படும்

புதுடில்லி:'பேடிஎம்' செயலி வரும் 29ம் தேதிக்கு பிறகும் எப்போதும் போல செயல்படும் என, அதன் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ரிசர்வ் வங்கி, பிப்ரவரி 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி டிபாசிட்கள் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், சேமிப்பு வங்கி கணக்குகள், வணிக கணக்குகள், பிரீபெய்டு கருவிகள் உள்ளிட்டவற்றில் உள்ள இருப்புத் தொகையை, அதன் வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற அல்லது பயன்படுத்த, அவற்றின் இருப்பு உள்ளவரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.இந்நிலையில் இது குறித்து, விஜய் சேகர் ஷர்மா தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:பேடிஎம் செயலி பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகும், தொடர்ந்து எப்போதும் போல செயல்படும். ரிசர்வ் வங்கியின் உத்தரவை ஒரு பெரிய வேகத்தடையாகத் தான் நாங்கள் பார்க்கிறோம். எனினும், மற்ற வங்கிகளுடன் எங்களின் கூட்டாண்மை மற்றும் ஏற்கனவே உருவாக்கிய திறன்களுடன், அடுத்த சில நாட்கள் அல்லது காலாண்டுகளில் இதிலிருந்து மீள முடியும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.இதற்கிடையே, பேடிஎம் வங்கியின் முடக்கப்பட்ட செயல்பாடுகளால், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பிற வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை காரணமாக, நிறுவனத்தின் ஆண்டு லாபம் 300 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை பாதிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ