மேலும் செய்திகள்
அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது
12-Dec-2025
கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்
10-Dec-2025
நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,
04-Dec-2025
புதுடில்லி:வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில், மத்திய அரசு எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. கடந்தாண்டு டிசம்பர் இறுதியில், நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு 10 முதல் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டு முதல், நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டு வரை தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் உயர்த்தி வந்தது. இதற்கு முந்தைய ஒன்பது காலாண்டுகளில், வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் நிதி அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. சந்தையில் அரசின் கடன் பத்திரங்களுக்கான வருவாயைப் பொறுத்தே, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, சந்தையில் அரசின் கடன் பத்திரங்களுக்கான வருவாய் சரியும்போது, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்படும். ஆனால், தற்போது கடன் பத்திர வருவாய் சரிந்துள்ளபோதிலும், வட்டி குறைக்கப்படவில்லை.
12-Dec-2025
10-Dec-2025
04-Dec-2025