உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 12 புதிய தொழில் நகரங்கள் ஆந்திரா, பீஹாருக்கு வாய்ப்பு

12 புதிய தொழில் நகரங்கள் ஆந்திரா, பீஹாருக்கு வாய்ப்பு

புதுடில்லி:சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிதாக 12 தொழில்நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இத்திட்டம் தொடர்பாக ஆலோசிக்க, மத்திய அமைச்சரவையை சந்திக்க உள்ள தாக, மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது. டி.பி.ஐ.ஐ.டி., என அழைக்கப்படும் இத்துறையின் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்ததாவது:நாட்டில் ஏற்கனவே எட்டு தொழில் நகரங்கள் செயல்பாட்டுக்கு வரும் தருவாயில் இருக்கின்றன. இவற்றில் நான்கு நகரங்களில் அடிப்படை கட்டமைப்புகள் முடிக்கப்பட்டு, நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள நான்கு நகரங்களில் சாலை, நீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நகரங்கள் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் அமைந்துள்ளன. இதுபோன்ற தொழில்துறை நகரங்கள், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தயாரிப்பு துறையின் பங்கையும்; வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க உதவும். இந்நிலையில், பட் ஜெட்டில் மேலும் 12 தொழில் நகரங்கள் அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 நகரங்கள் ஆந்திராவிலும், ஒன்று பீஹார் மாநிலத்திலும் அமைக்கப்பட இருக்கிறது. இதையடுத்து மொத்தம் 20 நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக ஆலோசிக்க மத்திய அமைச்சரவையை சந்திக்க உள்ளோம். இதனை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் தயாராக உள்ளது. நிலம் மாநில அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு ஒப்புதல்வழங்கும்பட்சத்தில், இதற்கான பணிகள் துவங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raj
ஜூலை 27, 2024 06:09

இங்கே தமிழக அரசு என்று கூறிக்கொன்று தமிழகம் வளர்ச்சி அடைவதை தான் இந்த அரசு கவனம் காட்டுவது இல்லை, இனி தொழில் துடங்குவோர் எல்லாம் ஆந்திர, பீகார் என்று போய்விடுவார்கள். என்ன வளங்கள் இல்லை நம் தமிழ்நாட்டில், எல்லாம் இருந்தும் நாம் அழிவை நோக்கித்தான் போகிறோம் ஒரு சிலர் அரசியல் காரணத்தால். என்று வளரும் நம் தமிழ்நாடு?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை