உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொல்லை அழைப்பு 2.75 லட்சம் எண்கள் கட்

தொல்லை அழைப்பு 2.75 லட்சம் எண்கள் கட்

புதுடில்லி:வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் அழைப்புகளை மேற்கொண்டு வந்ததாக, 2.75 லட்சம் தொலைபேசி எண்களை 'ட்ராய்' முடக்கியுள்ளது. முறையாக பதிவு செய்யாத, 'டெலி மார்க்கெட்டிங்' நிறுவனங்களின் தொலைபேசி எண்களை முடக்க, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, 'ட்ராய்' ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில், நடப்பாண்டின் முதல் அரையாண்டில், 50 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக 'ட்ராய்' நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால், தொல்லை தரும் அழைப்புகள் எண்ணிக்கை குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Annamalai
செப் 04, 2024 08:00

இவர்களுக்காக நாம் போன் வைத்து இருப்பது போல் உள்ளது .எப்போ கூப்பிடக்கூடாதோ அப்பத்தான் கூப்பிடுவார்கள் .450 நம்பர் பிளாக் செய்து உள்ளேன் இன்னும் தினம் ஐந்து கால் வந்து கொண்டே உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை