புதுடில்லி:நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டை லாபகரமாக துவக்கி உள்ளன. 'மாருதி, டாடா, ஹூண்டாய்' உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் மாதத்துக்கான வாகன விற்பனையில், வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த 2024ம் நிதியாண்டில், பயணியர் வாகன விற்பனை, 9 சதவீதம் அதிகரித்து, 42.30 லட்சம் வாகனங்களாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இறுதி மாதமான, மார்ச்சிலும் விற்பனை வலுவாக இருந்தது. இதை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் துவக்க மாதமான ஏப்ரலிலும், விற்பனை அதிகரித்துள்ளது.மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், கடந்த மாதம் மொத்தம் 1.68 லட்சம் வாகனங்களை, முகவர்களுக்கு வழங்கி உள்ளது. இது முந்தைய 2023 ஏப்ரலில், விற்பனை செய்யப்பட்டிருந்த 1.60 லட்சம் வாகனங்களை விட, கிட்டத்தட்ட 5 சதவீதம் உயர்வு. நிறுவனத்தின் சிறிய ரக வாகனங்களான ஆல்டோ, எஸ்பிரஸோ ஆகியவற்றின் விற்பனை சரிந்துள்ளது. அதேசமயம், எர்டிகா, எஸ் கிராஸ் போன்ற யூட்டிலிட்டி வகை வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள், எளிமையை விடவும் வசதியை நோக்கி நகர்ந்துள்ளதை, இது உணர்த்துகிறது. ஹூண்டாய் நிறுவனம், மொத்தம் 63,701 வாகனங்களை கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. டாடா மற்றும் டொயோட்டா நிறுவனங்கள், முறையே 11 மற்றும் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதேபோல், இரு சக்கர வாகன நிறுவனங்களின் விற்பனையும், கடந்த மாதம் அதிகரித்துள்ளது.வாகன விற்பனை