உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டெஸ்லா பெயரில் மின் வாகனம்: குருகிராம் நிறுவனத்துக்கு தடை

டெஸ்லா பெயரில் மின் வாகனம்: குருகிராம் நிறுவனத்துக்கு தடை

புதுடில்லி : 'டெஸ்லா பவர்' எனும் பெயரில் மின்சார ஸ்கூட்டர் வணிகத்தில் ஈடுபட்டு வந்த குருகிராமை சேர்ந்த நிறுவனத்தின் மீது, டெஸ்லா பெயரை பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்கின் தலைமையிலான 'டெஸ்லா' நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கு விசாரணையில், டில்லி உயர் நீதிமன்றம், முதல்கட்ட நிவாரணத்தை டெஸ்லாவுக்கு வழங்கியுள்ளது. 'டெஸ்லா பவர்' நிறுவனம் இன்வெர்ட்டர் பேட்டரிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இதே பெயரில் மின்சார ஸ்கூட்டர் வணிகத்திலும் ஈடுபட்டதை அடுத்து, டெஸ்லா வழக்கு தொடர்ந்தது.வழக்கு விசாரணையின் போது பதிலளித்த, டெஸ்லா பவர் நிறுவனம், தங்களுடைய மின்சார ஸ்கூட்டர்களில் இருந்து 'டெஸ்லா பவர்' என்ற முத்திரையை அகற்றுமாறு, அனைத்து விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தது. மேலும், மின் வாகன தயாரிப்பில் ஈடுபடும் திட்டம் இல்லை என்றும், மின்சார ஸ்கூட்டர் விற்பனையில், மற்றொரு உற்பத்தியாளருடன் இணைந்து, சந்தைப்படுத்துதலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தது.இந்த உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்ளாத டெஸ்லா நிறுவனம், டெஸ்டா பிராண்டில் இன்னமும் மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளதாக, தன் அதிருப்தியை நீதிமன்றத்தில் தெரிவித்தது.இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், மின் வாகனங்களை தயாரிக்கவோ, விற்கவோ அல்லது சந்தைப்படுத்தவோ கூடாது என்று குருகிராம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை