உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீனாவுக்கான ஏற்றுமதி 2023ல் அதிகரிப்பு

சீனாவுக்கான ஏற்றுமதி 2023ல் அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த ஆண்டில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பெரும்பாலான முக்கிய பொருட்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன என, வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, சீனாவுக்கு 161 வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் இரும்புத் தாது, தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் மின்னணு மூலப் பொருட்கள் உள்ளிட்ட 90 வகையான பொருட்கள் சாதகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மேலும், இந்த 90 வகையான பொருட்கள், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 67.70 சதவீதத்தை கொண்டுள்ளன. சீனப் பொருட்கள் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவு இருந்தபோதிலும், கடந்த ஆண்டில், சீனாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.சீனாவுக்கான ஏற்றுமதிபொருள் மதிப்பு (ரூபாய் கோடியில்)இரும்பு தாது: 27,639 பருத்தி நுால்: 5,073 மசாலா பொருட்கள்: 1,098 கனிமங்கள்: 1,071 தொலைதொடர்பு கருவிகள்:2,055 மின்னணு உதிரிபாகங்கள்: 1,299


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை