உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்கம் உற்பத்தி 86% உயர்வு

தங்கம் உற்பத்தி 86% உயர்வு

புதுடில்லி:இந்திய சுரங்கங்களில் இருந்து, நடப்பாண்டு பிப்ரவரியில் தங்கத்தின் உற்பத்தி 86 சதவீதம் அதிகரித்து, 255 கிலோவாகவும், தாமிர உற்பத்தி 28.70 சதவீதம் அதிகரித்து 11,000 டன்னாகவும் உள்ளது என, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மற்ற முக்கிய தாதுக்களில், பாக்சைட் அலுமினியம் உற்பத்தி 21 சதவீதமும், குரோமைட் உற்பத்தி 21 சதவீதமும் உயர்ந்துள்ளது.இந்தியாவின் சுரங்கம் மற்றும் குவாரிகளின் கனிம உற்பத்தியின் ஒட்டுமொத்த குறியீடு, பிப்ரவரில் 8 சதவீதம் உயர்ந்துஉள்ளது இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ