உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு விலக்கு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு

பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு விலக்கு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு

புதுடில்லி:ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 53வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டில்லியில் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின், நடைபெற்ற முதல் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tuacppu6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட், பயணியர் காத்திருப்பு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகிவற்றுக்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது உருக்கு மற்றும் அலுமினிய பால் கேன்களுக்கும்; சோலார் குக்கர்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது  அட்டைப் பெட்டிகள் மற்றும் தெளிப்பான்களுக்கும் 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைத்து, ஜி.எஸ்.டி., வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைத் தவிர, வெளியில் உள்ள பிற தங்கும் விடுதிகளில், ஒரு நபருக்கு மாதம் 20,000 ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கப்படும்பட்சத்தில், அதற்கு ஜி.எஸ்.டி., யிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது போலியான விலைப்பட்டியல்களை சமர்ப்பித்து, உள்ளீட்டு வரி பயன் கோருவதை தடுக்கும் நோக்கில், விரைவில் நாடு முழுதும், பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் பதிவு பயன்படுத்தப்பட உள்ளது ஜி.எஸ்.டி., வரி விதிப்பு சதவீதத்தில் மாற்றங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் குழுவுக்கு தலைவராக, பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்  கடந்த 2017 - 18 முதல் 2019 - 20ம் நிதியாண்டுகள் வரை செலுத்த வேண்டிய வரியை, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தும்பட்சத்தில், அவர்களுக்கு வட்டியுடன் கூடிய அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்  ஜி.எஸ்.டி., தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான வரம்பாக, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு 20 லட்சம் ரூபாயும், உயர் நீதிமன்றத்திற்கு 1 கோடி ரூபாயும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கோடி ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் சேர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். மாநில அரசுகளுடன் பேசி இதற்கான முடிவு எட்டப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajarajan
ஜூன் 24, 2024 09:35

அடப்பாவிகளா இந்த சலுகையை அறிவிக்கவா, அத்தனை பொருளாதார நிபுணர்களையும் கூட்டி உட்காரவெச்சி, ஆலோசனை நடத்தினீங்க ? சரியா போச்சு போ.


Rajarajan
ஜூன் 24, 2024 09:02

பொதுவாகவே அரசின் பட்ஜெட் என்றால் என்ன? நிரந்தர செலவு, அவசிய செலவு, விட்டுப்போன செலவு ஆகியவை தான். அவசிய செலவுக்கு தான் பட்ஜெட்ல முக்கிய ஒதுக்கீடு இருக்கும். அது என்ன? அரசு துறை ஊழியரின்/MP/ MLA/ தலைமை முதல் கடைசி அமைச்சர் ஆகியோரின் சம்பளம், போனஸ், ஊதிய உயர்வு, ஓய்வூதியம், அகவிலைப்படி / சலுகை இப்படி. இது சுமார் எழுபது சதவிகிதம், பட்ஜெட் மொத்த நிதியில் ஆக்கிரமிப்பாக இருக்கும். முதலில் இந்த செலவு தான் தக்க வைப்பர். பிறகு தான் மற்றவை மிச்சம் மீதி. ஆனால், இதை எந்த ஆளும் / எதிர் கட்சியும் வெளியே சொல்லவே சொல்லாது. பட்ஜெட் உரையிலும் இந்த செலவினங்கள் அறிவிக்கவே படாது. ஆனால், மீதி மிச்சம் உள்ள திட்டங்கள், தனியார் நிறுவனங்களின்/ சேவை நிறுவனங்களின் /தனி நபர் வருமானம் மற்றும் சேமிப்பின் மீது வரி சுமை செலுத்தி, புரியாத வகையில் மணிக்கணக்கில் பட்ஜெட் உரை வாசிப்பர். கல்கண்டு, கம்மர்கட்டு, குச்சிமிட்டாய், குருவிரொட்டி போன்றவற்றிக்கு வரிவிலக்கு அளிப்பர். ஆனால், தனிநபர் வருமானம், சேமிப்பு, அத்தியாவசிய செலவினங்கள் போன்றவற்றின் மீது தான் கூடுதல் வரி சுமை விதிப்பர். இதில் மாட்டிக்கொள்பவர் தனியார் ஊழியர் மற்றும் ஏழை பாழய் தான். அரசு ஊழியருக்கு எப்போதுமே ஊதிய உயர்வு / பஞ்சபடியில் கூடுதல் / முன்தேதியிட்ட வருமானம் போன்ற ஜாக்பாட்டுகள் இருக்கும். அதாவது, ஏற்கனவே வாழ்க்கை நடத்தவே கஷ்டப்படும் தனியார் மற்றும் ஏழை பாழையிடம் எடுத்து, அரசுஊழியருக்கு வாரி வாரி வழங்கப்படும். இதை சுருக்கமாக பட்ஜெட் உரையில் குறிப்பிட முடியும். ஆனால், சுற்றி வளைத்து, மணிக்கணக்கில் பட்ஜெட் உரை, மற்ற துறைகளில் செலவுகள் / கடன்கள் மட்டுமே வாசிக்கப்படும். அதாவது, அரசின் மீதி சுமார் முப்பது சதவிகித வருவாய் மற்றும் செலவினங்கள் மட்டுமே வெளியிடுவர். ஒன்று கவனித்திருக்கிறீர்களா?? எப்போதுமே, அரசின் திட்டங்கள் வருடக்கணக்கில் நடைபெறும். கேட்டால் வருமான பற்றாக்குறை என்பார்கள். ஆனால், அரசு ஊழியருக்கு / அணைத்து அமைச்சர்கள் / MLA / MP க்களுக்கு வாரி வழங்குவதில், என்றைக்கேனும் பட்ஜெட்டில் துண்டு விழுந்து பார்த்திருக்கிறீர்களா? இந்த ஒட்டுமொத்த செலவை பட்ஜெட்டில் வாசித்து பார்த்திருக்கிறீர்களா? நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசுத்துறைக்கு எவ்வளவு பட்ஜெட்டில் வீணாக ஒதுக்குகிறார்கள் என்று அறிவித்து பார்த்திருக்கிறீர்களா? இதுதான் வறுமையை ஒழிக்கும் பட்ஜெட் என்று மார்தட்டுவர். எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டும் ? இதே காட்சி தான் அரங்கேறும். இக்கரைக்கு அக்கறை பச்சை. இதுதான் நமது ஜனநாயகம். உண்மையா ?? இல்லையா ??


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை