மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
6 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
6 hour(s) ago
டூ - வீலர் விற்பனை 9 சதவீதம் உயர்வு
05-Oct-2025
புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர முயற்சிப்போம் என, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்து உள்ளார்.ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வாகன எரிபொருட்களை கொண்டு வந்தால், அவற்றின் விலை குறைவதுடன், சாமானிய மக்களுக்கும் இது பயனளிக்கும் என்ற வகையில் அனைத்து கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்படும் என்பதால், ஜி.எஸ்.டி., கவுன்சிலில் இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்களை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர முயற்சிக்கப்படும் என, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
6 hour(s) ago
6 hour(s) ago
05-Oct-2025