புதுடில்லி : வாகன சில்லரை விற்பனை, கடந்த மாதம், 2.61 சதவீதம் வளர்ச்சி கண்டதாக, 'படா' எனும் வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த மே மாதம் இந்தியாவில், மொத்தம் 20.89 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது கடந்தாண்டு மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 20.36 லட்சத்தை விடவும், 2.61 சதவீதம் உயர்வாகும். எனினும், முந்தைய ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 5.28 சதவீதம் சரிவாகும்.கார்கள் மற்றும் டிராக்டரை தவிர்த்து, மற்ற அனைத்து பிரிவுகளும் விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளன. இரு சக்கர வாகனங்களின் விற்பனை, 2.50 சதவீதம் ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும், மாதாந்திர அடிப்படையில் 6.60 சதவீதம் சரிவை கண்டுள்ளது. வினியோக பிரச்னைகள், வாகன தயாரிப்பாளர்களின் குறைந்த சந்தைப்படுத்துதல் நடவடிக்கை போன்றவற்றால், விற்பனை, கடந்த ஏப்ரல் மாதத்தை விடவும் சரிந்ததாக கூறப்படுகிறது.கார் பிரிவில், வினியோகம் ஒழுங்காக இருந்த போதிலும், தேர்தல் மற்றும் அதிகப்படியான வெப்பம் போன்ற காரணங்களால், விற்பனை சரிந்துள்ளது. அதிக வெப்பத்தால், மக்கள் ஷோரூம்களுக்கு செல்வது, 18 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போக, ஏற்கனவே நிலுவையில் இருந்த புக்கிங், புதிய மாடல்கள் இல் லாதது போன்றவையும் விற்பனை குறைய காரணமாக கூறப்படுகிறது.தேர்தல் முடிந்து புதிய அரசு தற்போது பதவியேற்றுள்ளதால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து, வாகன சந்தை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாதகமான பருவமழை கணிப்பும், கிராமப்புற தேவையை அதிகரித்து, வாகன விற்பனையை வரும் மாதங்களில் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வாகன சில்லரை விற்பனைபிரிவு மே 2023 மே 2024 வளர்ச்சி
மே 2023 20,36,528
மே 2024 20,89,603 2.61% ஏற்றம் இரு சக்கர வாகனங்கள் 14,97,778 15,34,856 2% ஏற்றம்மூன்று சக்கர வாகனங்கள் 81,825 98,265 20% ஏற்றம்பயணியர் வாகனங்கள் 3,06,305 3,03,358 1% சரிவுவணிக வாகனங்கள் 79,807 83,059 4% ஏற்றம்டிராக்டர் 70,813 70,065 1% சரிவு