உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / விற்பனையில் பிரிட்டானியாவை பின்னுக்கு தள்ளிய ஐ.டி.சி.,

விற்பனையில் பிரிட்டானியாவை பின்னுக்கு தள்ளிய ஐ.டி.சி.,

புதுடில்லி:ஐ.டி.சி., நிறுவனத்தின் விற்பனை, கடந்த நிதியாண்டில் 17,195 கோடி ரூபாயாக இருந்தது. இதே பிரிவில் செயல்பட்டு வரும் பிரிட்டானியா நிறுவனத்தின் விற்பனை 16,769 கோடி ரூபாயாக இருந்தது.ஐ.டி.சி., நிறுவனத்தின் விற்பனை, முந்தைய ஆண்டை விடவும் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரிட்டானியாவின் விற்பனை 2.90 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுஉள்ளது. இதையடுத்து, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தயாரிக்கும் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக ஐ.டி.சி., முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் 'நெஸ்லே' உள்ளது.முன்னணி நிறுவனங்கள்நிறுவனம் விற்பனை (ரூபாய் கோடியில்)1) நெஸ்லே 24,275.502) ஐ.டி.சி., 17,194.503) பிரிட்டானியா 16,769.20(மார்ச் 31, 2024 நிலவரப்படி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஜூன் 30, 2024 18:41

பிரிட்டானிய பயங்கர நஷ்டம் என்று சொல்லி மேற்கு வங்காளத்தில் கடையை மூடி விட்டார்களே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை