உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆன்லைன் வர்த்தக சேவை ஒரே வாரத்தில் ஒப்புதல்

ஆன்லைன் வர்த்தக சேவை ஒரே வாரத்தில் ஒப்புதல்

புதுடில்லி:பங்கு தரகர்கள் இணையதள அடிப்படையிலான வர்த்தக சேவையை வழங்குவதற்கு, விண்ணப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் பங்கு சந்தைகள் ஒப்புதல் வழங்க வேண்டும் என 'செபி' உத்தரவிட்டுள்ளது.தற்போதுள்ள நடைமுறையின்படி, விண்ணப்பித்து 30 நாட்களுக்குள், பங்கு சந்தைகள் இது தொடர்பாக ஒப்புதல் வழங்க வேண்டும்.இந்நிலையில், வணிகத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செபி மேலும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ