உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்திய சூரிய மின்சக்தி உற்பத்தி புரட்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய சூரிய மின்சக்தி உற்பத்தி புரட்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் பிரதமர் மோடி பெருமிதம்

காந்திநகர் : “இருபத்தோராம் நுாற்றாண்டின் வரலாறு எழுதப்பட்டால், அதில் இந்தியாவின் சூரியமின் உற்பத்தி புரட்சி பொன்னெழுத்துகளில் இடம்பெறும்,” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத்தின் காந்திநகரில், உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் கூட்டம் மற்றும் கண்காட்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக, ஒவ்வொரு துறையிலும் கடந்த 100 நாள் ஆட்சியில், வேகமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சிக்கு தற்போது அடித்தளத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறோம்.

அடித்தளம் அவசியம்

உலகப் பொருளாதாரத் தில் முதலிடம் பிடிப்பது மட்டும் நோக்கமல்ல; அந்த இடத்தை இந்தியா எதிர்காலத்தில் தக்கவைத்துக் கொள்ளவும் அடித்தளம் அவசியம்.வளர்ந்த நாடு என்ற இலக்கை, 2047ல் இந்தியா அடைவதற்கு தேவையான எரிசக்தி தேவையை அறிந்திருக்கிறோம். எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நம்மிடம் போதிய அளவு இல்லாததால், எரிசக்தியில் சுயசார்பு நிலை தற்போது நம்மிடம் இல்லை. இந்நிலையை மாற்ற, சூரிய மின்சக்தி, அணுசக்தி, காற்றாலை, நீர்மின்சக்தி ஆகியவற்றின் வாயிலாக சுயசார்பை அடைய அரசு திட்டமிட்டு உள்ளது.பசுமையான எதிர்காலம், பூஜ்யம் மாசு என்பவை அலங்கார வார்த்தைகள் அல்ல. அவை இன்றைய அவசிய தேவை என்பதால், அவற்றை அடைய உறுதி கொண்டு உள்ளோம். அயோத்தி உட்பட 16 நகரங்களை, மாதிரி சூரியசக்தி நகரங்களாக்க அரசு பணியாற்றி வருகிறது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப புதிய கொள்கைகளை வகுத்து, அனைத்து ஆதரவையும் அரசு அளித்து வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதானி முதலீடு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில், 2030ம் ஆண்டுக்குள், 4.06 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, 'அதானி' குழுமம் தெரிவித்துள்ளது. 2030 வாக்கில், 50 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தங்கள் நிறுவனம் நாட்டுக்கு பங்காக அளிக்கும் என்றுதெரிவித்து உள்ளது.

முதலீடு இலக்கு

ரூ.32 லட்சம் கோடிபசுமை எரிசக்தி திட்டங்களில், 2030ம் ஆண்டுக்குள், 32.45 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வங்கிகள், நிதி நிறுவனங்கள் உறுதியளித்து உள்ளதாக, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இன்னும் ஐந்து ஆண்டுகளில், 500 ஜிகாவாட் பசுமை எரிசக்தி உற்பத்தி இலக்கை அடையும் அரசின் முயற்சிக்கு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உற்பத்தியாளர்கள், நிதி நிறுவனங்கள் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார்.

அதானி முதலீடு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில், 2030ம் ஆண்டுக்குள் 4.06 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, 'அதானி' குழுமம் தெரிவித்துள்ளது. 'அதானி கிரீன் எனர்ஜி, அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ்' சார்பில் இந்த முதலீடு செய்யப்படும் என்றும், 2030 வாக்கில், 50 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தங்கள் நிறுவனம் நாட்டுக்கு பங்களிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை