மேலும் செய்திகள்
உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா
3 hour(s) ago
சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
3 hour(s) ago
பசுந்தேயிலைக்கு ஆதார விலை கிலோவுக்கு ரூ.40 வேண்டும்
3 hour(s) ago
புதுடில்லி: மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில், இன்று முதல் விருப்ப அடிப்படையில், குறிப்பிட்ட சில பங்குகளுக்கு மட்டும், வர்த்தகம் மேற்கொண்ட அதே நாளிலேயே பணத்தை பெறுவதற்கான உடனடி செட்டில்மென்ட் முறை அறிமுகமாகிறது. தற்போதைய நடைமுறையில் வர்த்தகம் மேற்கொண்ட அடுத்த நாள் தான் பணத்தை பெற முடியும். ஆரம்பகட்டமாக, குறிப்பிட்ட 25 நிறுவன பங்குகளுக்கும், குறைந்த எண்ணிக்கையிலான தரகர்களுக்கும் மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 'எஸ்.பி.ஐ., பஜாஜ் ஆட்டோ, வேதாந்தா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், நெஸ்லே இந்தியா' உள்ளிட்டவை இந்த 25 நிறுவனங்களில் அடங்கும்.இந்நிலையில் இந்த நடவடிக்கை, வர்த்தக செலவு மற்றும் நேரத்தை குறைக்கவும்; முதலீட்டாளர்களுக்கு கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவும்; பங்குச் சந்தைகளில் ரிஸ்க் மேலாண்மையை வலுப்படுத்தவும் உதவும் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது பரிவர்த்தனை அபாயங்களை கணிசமாகக் குறைப்பதோடு, வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உடனடியாக முதலீட்டின் மதிப்பை வழங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago