உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரயில்வே நிறுவனங்கள் பங்கு விலை: அமைச்சர் அறிவிப்பால் உயர்வு

ரயில்வே நிறுவனங்கள் பங்கு விலை: அமைச்சர் அறிவிப்பால் உயர்வு

மும்பை: பங்குச் சந்தையில் நேற்று ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலை பெரும் ஏற்றத்தை சந்தித்தன. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த வெள்ளியன்று, ரயில்வே துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட போது, சில அறிவிப்புகளை வெளியிட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,500 புதிய பொது பெட்டிகள், 10,000 குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகள் மற்றும் 50 புதிய 'அம்ரித் பாரத்' ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று துவங்கிய சந்தையில், ரயில்வே துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக, பொதுத்துறை ரயில் நிறுவனங்களின் பங்கு விலை அதன் 52 வார உச்சத்தை எட்டின.

நிறுவனம் உயர்வு (%) பங்கு விலை (ரூ)

ஆர்.வி.என்.எல்., 15.57 567.50ஐ.ஆர்.எப்.சி., 7.58 202.50இர்கான் இன்டர்நேஷனல் 6.01 326.25டெக்ஸ்மாகோ 5.00 287.00ரயில்டெல் கார்ப்பரேசன் 2.51 532.80ஐ.ஆர்.சி.டி.சி., 1.85 1,045.20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ