உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்பெக்ட்ரம் ஏலம்: 3 நிறுவனங்கள் விண்ணப்பம்

ஸ்பெக்ட்ரம் ஏலம்: 3 நிறுவனங்கள் விண்ணப்பம்

புதுடில்லி : வரும் ஜூன் 6ம் தேதி துவங்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதற்காக, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.மொபைல் போன் சேவைகளுக்காக, அரசு எட்டு ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்க உள்ளது. இந்த எட்டு அலைவரிசைகளின் அடிப்படை விலை, 96,317 கோடி ரூபாயாகும். இந்த ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும். ஏலத்தில் வெல்லும் நிறுவனம், 20 சம ஆண்டு தவணையில் பணத்தை செலுத்த வேண்டும். இந்த ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ள நிறுவனங்களின் விபரம், வரும் 10-ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பங்களை திரும்பப் பெற, மே 17-ம்தேதி கடைசி நாளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்