உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சுற்றுலா துறையில் டாடா புதிய பண்டு

சுற்றுலா துறையில் டாடா புதிய பண்டு

புதுடில்லி: நாட்டின் முதல் சுற்றுலா இண்டெக்ஸ் பண்டை, டாடா மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பண்டு, 'நிப்டி 500' குறியீட்டில் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை தொகுத்து உருவாக்கப்பட்டு உள்ளது.நிப்டி இந்தியா சுற்றுலாத்துறை குறியீட்டை பின்பற்றி, இந்த பண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, இந்தியாவில் சுற்றுலா துறை சார்ந்த பொருளாதாரம், நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், விமானங்கள், ரயில்கள் என சுற்றுலாவுக்கு தொடர்புடைய அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டே, டாடா மியூச்சுவல் பண்டு நிறுவனம் இந்த புதிய பண்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், வரும் 19ம் தேதி வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ