உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

3,200 கோடி

அசாமில் சிமென்ட் தயாரிப்பு ஆலை அமைக்க, ஸ்டார் சிமென்ட் முதலீடு செய்ய உள்ள தொகை இது. கவுகாத்தியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் கடைசி நாளான நேற்று, புதிய ஆலை அமைப்பது தொடர்பாக அசாம் மாநில அரசுக்கும், ஸ்டார் சிமென்ட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அசாம் முதலீட்டாளர்கள் மாநாட்டில், 15 துறைகளில் முதலீடுகள் செய்வது தொடர்பாக, மொத்தம் 164 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

1,800 கோடி

ஆதித்ய பிர்லா குழுமத்தில் இருந்து தனியாக பிரிந்து செயல்பட, கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அல்ட்ராடெக் சிமென்ட் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 1:52 என்ற விகிதத்தில், 52 பங்குகளுக்கு, ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்குதாரர்களுக்கு புதிய பங்குகளை வழங்க உள்ளது. மேலும், ஒயர் மற்றும் கேபிள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு, கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 1,800 கோடி ரூபாயை மூலதனமாக செலவிட இருப்பதாக அல்ட்ரா டெக் சிமென்ட் சந்தையில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !