| ADDED : ஜூன் 04, 2024 06:52 AM
புதுடில்லி : சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், கடந்த மே மாதத்தில் 'ஏசி' விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக, அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு கோடை காலத்தில், வழக்கத்தைவிட வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது. டில்லி உள்ளிட்ட பல இடங்களில் 45 டிகிரி வரை கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், 'ஏசி'க்கான தேவை அதிகரித்துள்ளதால், அதன் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக 'ஏசி' தயாரிப்புக்கான நிறுவனங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.வோல்டாஸ், எல்.ஜி., டைக்கின், பானாசோனிக் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற முன்னணி பிராண்டுகள், கடந்த மே மாதம் தங்களது விற்பனையில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில், ஒட்டுமொத்த வளர்ச்சி 30 முதல் 35 சதவீதம் அதிகரிக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.