உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆன்லைன் பாலிசியால் பயனாளிகள் அதிருப்தி

ஆன்லைன் பாலிசியால் பயனாளிகள் அதிருப்தி

இணையம் மூலம் காப்பீடு பாலிசி வாங்கும் போது பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாவதாக பயனாளிகள் பலரும் அதிருப்தி அடைவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பான 'லோக்கல் சர்க்கிள்ஸ்' இந்தியா முழுதும் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆன்லைனில் காப்பீடு பாலிசி வாங்கும் போது, பாலிசியை ரத்து செய்ய விரும்பினால், எளிதாக ரத்து செய்ய முடியாமல் சிக்கித் தவிர்க்கும் நிலை இருப்பதாக, 61 சதவீத பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெரும்பாலான காப்பீடு சேவை இணையதளங்கள் தொடர் நோட்டிபிகேஷன்கள் மூலம், பாலிசி வாங்க நிர்ப்பந்திப்பதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். பல நேரங்களில் தேவையில்லாமல் தனிப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுவதாகவும் 57 சதவீத பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து, சேவைகளை பெற வைப்பதற்காக இணைய வடிவமைப்பு நோக்கில் மேற்கொள்ளப்படும் பலவிதமான உத்திகளை காப்பீடு சேவை இணையதளங்களும் பின்பற்றுவதால், இத்தகைய அனுபவம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக வாங்க துாண்டுவது, வாய்ப்பை தவறவிடும் உணர்வை உண்டாக்குவது போன்ற அம்சங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வடிவமைப்பு உத்திகளாக பயன்படுத்தப்படுகின்றன. இவை, வாடிக்கையாளர்கள் தேர்வை குறைப்பதாகக் கருதப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை