மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
3 hour(s) ago
டூ - வீலர் விற்பனை 9 சதவீதம் உயர்வு
05-Oct-2025
சென்னை: தமிழகத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, 10 சதவீதம் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.நாட்டிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 43 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை மேலும் அதிகரிக்க, தமிழக அரசு சிறப்பு திட்டம் ஒன்றை இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவித்தது.அதன்படி, தமிழக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கை ஆகியோருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் ஊதிய மானியம், இரு ஆண்டுகளுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, 'சிப்காட்' தொழில் பூங்கா போன்றவற்றில் தொழில் துவங்கி, 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு மானிய சலுகையை அரசு விரைவில் வழங்க முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில், ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த தொழில் நிறுவனங்களிடம், வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது, தமிழக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களுக்கு, அரசு வழங்கும் மானியத்தை தரும் பணிகளை, 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம் மேற்கொள்கிறது.புதிய திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம், 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கியது, அவர்களுக்கு சம்பளம் வழங்கியது உள்ளிட்ட விபரங்களை அரசுக்கு சமர்ப்பித்தால், மொத்த சம்பள மதிப்பில், 10 சதவீதத்தை மானியமாக அரசு வழங்கும். இதனால், பல நிறுவனங்களும் அதிகமான பெண்களுக்கு வேலை வழங்க முன்வரும். இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
05-Oct-2025