உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்க பத்திரம் முதலீட்டில் 147 சதவீதம் லாபம்

தங்க பத்திரம் முதலீட்டில் 147 சதவீதம் லாபம்

மும்பை,:ரிசர்வ் வங்கியால், கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட ஒன்பதாம் கட்டம் மற்றும் 2020 - 21ம் நிதியாண்டில் வெளியிடப் பட்ட ஐந்தாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகளை முன்கூட்டியே முடிக்க, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தங்க இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை, கடந்த 2015ம் ஆண்டு துவக் கியது. எட்டு ஆண்டு களில் தங்கப் பத்திரம் முதிர் வடையும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின் முன்கூட்டியே கணக்கை முடித்து முதிர்வுத் தொகையை திரும்ப பெறலாம். அந்த வகையில், கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வெளியான ஒன்பதாம் கட் டம் மற்றும் 2020 - 21ல் வெளியிடப்பட்ட ஐந்தாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகளை முன்கூட்டியே திரும்ப பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு 10,070 என்ற விலை வழங்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளது. கணக்கீட்டின்படி, கடந்த 2019 - 20ல் ஒன்பதாம் கட்டத்தில் கிராம் ஒன்றுக்கு 4,070 ரூபாயாக, யூனிட் ஒன்றில் முதலீடு செய்தவர்கள், தற்போது யூனிட்டுக்கு 6,000 என்ற மதிப்பில் 147 சதவீதம் முழுமையான லாபத்தை பெறுவர். இதேபோன்று, 2020 -  21ல் வெளியிடப்பட்ட ஐந்தாம் கட்டத்தில், கிராம் ஒன்றுக்கு 5,334 ரூபாயாக, ஒரு யூனிட்டில் முதலீடு செய்தவர்கள், 4,736 ரூபாய் என்ற மதிப்பில் 89 சதவீதம் லாபம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்கூட்டி திரும்பப் பெற விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த 6, 7, 8ம் தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலை அடிப்படையில், கிராமுக்கு 10,070 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !