உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.100 கோடியில் 16 சொகுசு வீடுகள் விற்பனை

ரூ.100 கோடியில் 16 சொகுசு வீடுகள் விற்பனை

புதுடில்லி:கடந்தாண்டு மும்பையில் விற்பனையான 16 சொகுசு வீடுகளில், ஒவ்வொரு வீட்டின் விலை 100 கோடி ரூபாய்க்கு மேல் என தெரிய வந்துள்ளது. நாடு முழுதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட 59 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாக, அனராக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 52 வீடுகள் மும்பையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்பிரிவின் மொத்த விற்பனையில் இது, 88 சதவீதம். மீதமுள்ள ஏழு வீடுகளில் டில்லியில் மூன்றும்; ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் தலா இரண்டு வீடுகளும் விற்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை