உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்டார்ட் அப் நிதியுதவி விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்

ஸ்டார்ட் அப் நிதியுதவி விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்

சென்னை:தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ், 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம் செயல்படுகிறது. இது, 'டான்சீட்' எனப்படும் புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்கிறது.இந்த திட்டத்தில், பசுமை தொழில்நுட்பம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பெண்கள் முதன்மை பங்குதாரராக உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.புத்தொழில் ஆதார திட்டத்தின் ஆறாவது வெளியீட்டில் நிதி உதவி பெற, விருப்பம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 25ம் தேதி முதல் துவங்கியது.இதற்கு, ஸ்டார்ட் அப் டி.என்., இணையதளத்தில் இம்மாதம், 7ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின், அந்த அவகாசம், வரும், 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை, 510 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரசின் நிதி உதவிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை