மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
4 hour(s) ago
டூ - வீலர் விற்பனை 9 சதவீதம் உயர்வு
05-Oct-2025
சென்னை:சென்னை துறைமுகம் கடந்த 27ம் தேதியன்று ஒரே நாளில் 3,40,583 டன் சரக்குகளை கையாண்டு, புதிய சாதனை படைத்து உள்ளது.நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில், மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. சென்னை கடற்கரை பகுதியில் 1639ம் ஆண்டு கப்பல் வணிகப் போக்குவரத்து துவங்கியது. 1881ம் ஆண்டு, செயற்கை துறைமுகம் அமைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று, இந்த துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை இங்கு அதிகளவில் கையாளப்படுகின்றன. இந்நிலையில், இத்துறைமுகம் கடந்த 27ம் தேதியன்று, ஒரே நாளில் 3.41 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன், 2021 ஏப்., 30ம் தேதி, 3.12 லட்சம் டன் சரக்குகள் கையாண்டதே, இதுவரை பெரிய சாதனை அளவாக இருந்தது. தற்போது புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
4 hour(s) ago
4 hour(s) ago
05-Oct-2025