உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கரும்புச்சக்கை மின்சாரம் யூனிட்டுக்கு 5.90 கட்டணம்

கரும்புச்சக்கை மின்சாரம் யூனிட்டுக்கு 5.90 கட்டணம்

சென்னை:தமிழக மின் வாரியம், சர்க்கரை ஆலைகளில் உள்ள இணைமின் நிலையங்களில் இருந்தும், கரும்பு சக்கையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளிலும் இருந்தும் மின்சாரம் வாங்குகிறது.அந்த மின்சாரத்தின் 1 யூனிட் மின் கொள்முதல் விலை, 5.52 ரூபாயாக உள்ளது. அதில், நிலையான செலவு, 2.25 ரூபாயாகவும்; மாறும் செலவு, 3.27 ரூபாயாகவும் உள்ளது. தற்போது, புதிய மின் கொள்முதல் விலையை நிர்ணயித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பு, 2023 - 24ம் நிதியாண்டிற்கு, 1 யூனிட் மின் கொள்முதல் விலை, 5.90 ரூபாயாகவும்; 2024 - 25க்கு, 1 யூனிட்டிற்கு, 6.11 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இரு வகையிலும், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து, 676 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய, மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை