சிவகாசியில் காலண்டருக்கு 75 சதவீதம் ஆர்டர் வரத்து
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், 2026ம் ஆண்டிற்கான புதிய காலண்டருக்கு, திட்டமிட்டதில் 75 சதவீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெயசங்கர் கூறுகையில், 'இதுவரை பெறப்பட்ட ஆர்டரில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அவ்வப்போது பெய்த மழை, வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக, சற்றுத் தொய்வு ஏற்பட்டது. தற்போது பணி மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி டிச. 15 லிருந்து அரசியல் கட்சியினரும் ஆர்டர் கொடுப்பர். டிச., இறுதிக்குள் நுாறு சதவீத ஆர்டர் கிடைத்துவிடும்' என்றார்.