எத்தனால் கலப்பால் ரூ.91,000 கோடி சேமிப்பு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்
பெங்களூரு:பெட்ரோல், டீசலில் எத்தனால் உட்பட உயிரி எரிபொருட்கள் கலப்பு வாயிலாக, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் 91,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 27வது எரிசக்தி தொழில் நுட்ப மாநாட்டை துவக்கி வைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது:உலகளவில் உயிரி எரிபொருள் கலப்பில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை, நம் நாடு அடுத்தாண்டுக்குள் எட்டிவிடும். நாட்டிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பசுமை எரிசக்திக்கு மாறி வரும் நிலையில், அரசின் பசுமை அம்மோனியா திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.இவ்வாறு தெரிவித்தார்.