மேலும் செய்திகள்
தமிழகத்தில் பேட்டரி சேமிப்புக்கு ஆர்டர் பெற்ற வாரீ குழுமம்
20 minutes ago
விக்ரம் சோலார் தமிழகத்தில் உற்பத்தி துவக்கம்
22 minutes ago
மும்பை: உள்நாட்டில் ராணுவ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி., மற்றும் கடற்படை உடன் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நவீன போர்த்திறனுக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களான எலக்ட்ரானிக் போர் அமைப்புகள், துல்லியமான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு அமைப்புகள், உயர் திறன் கொண்ட ஆயுதங்கள் உள்ளிட்டவற்றில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், கவனம் செலுத்த உள்ளது. இதில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றையும், அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஆய்வக யோசனைகளை களத்தில் தயாரிப்புகளாக மாற்றுவதையும், இந்திய கடற்படை ராணுவ தொழில்நுட்பத்தின் தேவை, செயல்பாடுகளை தயாரிப்புகள் பூர்த்தி செய்கிறதா என்றும் சோதனைகள் மேற்பார்வையிடுதல் பணிகளையும் கவனிக்க உள்ளன.
20 minutes ago
22 minutes ago