உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நிறுவனங்கள் தொழில் துவங்குவதை உறுதிப்படுத்த அதிகாரிகள் நியமனம்

நிறுவனங்கள் தொழில் துவங்குவதை உறுதிப்படுத்த அதிகாரிகள் நியமனம்

சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், தொழில் துவங்குவதை உறுதி செய்ய, தமிழக அரசு, ஐந்து மாவட்டத்திற்கு தலா ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிக்க முடிவு செய்துள்ளது.தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஜன., 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. அதில், 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக, 63,573 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 5,068 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.ஒப்பந்தம் செய்துள்ள இந்த நிறுவனங்களால், 2.51 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள் தொழில் துவங்குவதை உறுதி செய்ய, ஐந்து மாவட்டத்திற்கு ஒரு இணை இயக்குனர் வீதம், தமிழகம் முழுதும் அதிகாரிகளை நியமிக்க, தொழில் வணிக ஆணையரகம் முடிவு செய்துள்ளது. கண்காணிப்பு அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கிய மாவட்டத்தில் ஒப்பந்தம் செய்த தொழில் நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, அரசு துறைகளின் அனுமதி பெற்று தருவது, வங்கி கடன் உதவி செய்வது என, தொழில் துவங்க தேவையான பணிகளில் ஈடுபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி