மேலும் செய்திகள்
மொபைல் போன் திருடிய வாலிபர் கைது
15-Sep-2025
சென்னை:சர்வதேச ஆட்டோமொபைல் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் துவங்கியது. சி.ஐ.ஐ., சார்பில் ஆண்டுதோறும், நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆட்டோமொபைல் தொழில்நுட்ப கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 11வது கண்காட்சி மற்றும் மாநாடு நேற்று துவங்கியது. மூன்று நாள் வாகனம் மற்றும் உதிரி பொருட்கள் கண்காட்சியில், ஜப்பான் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சார்பில், 75 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் சார்ஜிங் உதிரிபாகங்கள், பராமரிப்பு மற்றும் வாகனகள் தயாரிப்பில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்துவது தொடர்பாக அரங்குகளுக்கு வந்த பார்வையாளர்கள், ஆர்வமாக தகவல்களை திரட்டிச் சென்றனர்.
15-Sep-2025